தெரிந்த வழிபாடுகளும் - தெரியாத செய்திகளும்
அன்பு சகோதர அன்பர்களே
நமது தமிழர்களின் வழிபாட்டு முறைகள் பலவிதமாக
காலம் காலமாக இருந்து வருகின்றன.
பல வழிபாட்டு முறைகள் காலவெள்ளத்தில்
மறைந்து போனாலும், ஒரு சில வழிபாட்டு முறைகள்
இன்றைக்கும் அந்த வழிபாட்டு முறைகள் எதற்காக தோன்றியதோ
அதன் சிறப்பை விட்டு வெகு தொலைவிற்கு அதன் நிலை மாறி
வேறு திசையில் பயணம் செய்வதை நம்மில் பலர் அறியாமல் உள்ளனர்.
அப்படி திசை மாறி பயணப்பட்டுக் கொண்டிருக்கும்
நமது பழந்தமிழர் வழிபாட்டு முறைகளை ஆராய்வோம்.
முதலில் நமது கலாச்சாரத்தை பற்றி முழுவதுமாக
உணர வேண்டுமென்றால் கிராம புறங்களில் நடைபெறும்
கிராம தெய்வ வழிபாட்டை பற்றி தெரிந்தால் மட்டுமே
முழுமையாக உணர முடியும்.
அந்த வகையில்
முனீஸ்வரன், காட்டேரி, சுடலை மாடன், மாடசாமி, ஐயனார்
போன்ற தெய்வங்களின் வழிபாடு எப்படி தோன்றியது,
அந்த வழிபாட்டு முறை தோன்றும்போது எப்படி இருந்தது
பன்னர் அது எப்படி உருமாறியது என்பதை பற்றி பார்ப்போம்.
முனீஸ்வரன்
முனீஸ்வரன் வழிபாடு இன்றைக்கும் ஒரு சில குடும்பங்களில்
பரம்பரையாக தொடர்ந்து வருகின்றது. இனறைக்கும்
முனீஸ்வரன் வழிபாட்டில் உருவம் வைத்து வணங்கப்படுவது இல்லை.
சரி முனீஸ்வரன் என்பவர் யார் என்று பார்த்தால்
காடுகளில் தவம் இயற்றி சிவ நிலை அடைந்த முனிவர்களே
முனீஸ்வரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
அவர்களின் தவ ஆற்றலின் காரணமாக
இவர்களை சுற்றி எப்போதும் ஒரு மின்சார அதிர்வுகள் இருக்கும்
அந்த அதிர்வுகளின் உள்ளே யாராவது தெரியாமல் நுழைந்து விட்டால்
அவர்களை அந்த அதிர்வுகள் மயக்கமுறச் செய்யும்,
தன்னிலை மறக்கச் செய்யும்.
அப்படிப்பட்ட அதிர்வலைகளில் நுழைந்தவர்கள்
தங்களை யாரோ தாக்கியது போன்று உணர்ந்து
அவ்விடம் வருவதை தவிர்த்து மற்றவர்களிடமும்
அவ்விடத்தில் முனி இருக்கின்றது. அது நம்மை தாக்கிவிடும்
என்று பயமுறுத்தி உள்ளனர்.
ஆனால் உண்மையை உணர்ந்த பலர்
அந்த சிவ நிலை பெற்ற முனிவர்களன அவர்களை
முனி ஈஸ்வரன் என வழிபட தொடங்கினர்
அதுவே நாளடைவில் முனீஸ்வரன் வழிபாடாக நிலைபெற்றது.
ஆக முனீஸ்வரன் வழிபாடு என்பது தவத்தில் சிறந்த
ஞானிகளை அதாவது சித்தர்களை வழிபடும் முறையே.
காட்டேரி பற்றி
அடுத்த பதிவில்
சந்திப்போம்
அன்பு சகோதரன்
நக்கினம் சிவம்
No comments:
Post a Comment